politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் அவர்களின் 13வது நினைவு தின கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இந்தியாவின் மதச்சார்பற்றஜனநாயக குடியரசை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. வை தோற்கடிக்கநமது அனைத்து சக்தியையும் பயன்படுத்த வேண்டும். சோசலிசத்துக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இதுவே தோழர் சுர்ஜித் அவர்களுக்கு நாம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலி.

                                    **********

பன்னாட்டு நிதி நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிமதிப்பீட்டை 12.5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக குறைத்துள்ளது. காரணங்கள்: நுகர்வோர் நம்பிக்கை மீட்சி மிகவும் மெதுவாக இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்துவது குறைவாகவும் சீரற்றும் இருப்பதாகவும் பன்னாட்டு நிதி நிறுவனம் மதிப்பிடுகிறது. ஜி 20 நாடுகளிலேயே இந்தியாதான் மிக மெதுவான மீட்சியை பெற்று வருகிறது.பொருளாதார மீட்சிக்கு மக்களின் வாங்கும் சக்தியையும் பொது செலவினங்களையும் அதிகரியுங்கள்.

                                    **********

இந்தியாவில் எவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன?மோடி அரசாங்கத்துக்கு தெரியுமா? இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஜூலை 20 ஆம் தேதி மூன்று வெவ்வேறு கேள்விகளுக்கு மூன்று முரண்பட்ட பதில்களை அரசாங்கம் தந்துள்ளது.முதல் கேள்வியில், கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 1 கோடி டோஸ் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அடுத்தகேள்வியிலேயே அதே அமைச்சகம் ,பாரத் பயோடெக் மாதம் ஒன்றுக்கு 2.5 கோடி டோஸ் தயாரிக்கிறது எனவும் கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனம்மாதம் ஒன்றுக்கு 11 கோடி டோஸ் தயாரிக்கிறது எனவும் ;மூன்றாவது கேள்வியில், பாரத் பயோடெக் 1.75 கோடி டோஸ்கள் தயாரிப்பதாகவும் சீரம் நிறுவனம்13 கோடி டோஸ் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளன.கோவிட் முதல் அலையை தவறாக கையாண்டதால் இரண்டாவது அலையின் பேரழிவு! தடுப்பூசி திட்டத்தை தவறாக கையாள்வதால் மூன்றாவது அலைக்கு அழைப்பு! மக்களின் உயிர்கள் குறித்து சிறிதும் கவலை கொள்ளாதஇப்படிப்பட்ட பொறுப்பற்ற அரசாங்கத்தை இந்தியா கண்டதே இல்லை.

                                    **********

பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா எனும் கேள்விக்கு மோடி அரசாங்கம் பதில் அளிக்க மறுக்கிறது. இந்தமறுப்பே சொல்லும் செய்தி என்னவெனில் மோடி அரசாங்கம் நம்மை உளவுபார்த்தது உறுதியாகிறது என்பதுதான்! இது குறித்து உச்ச நீதிமன்றத்தின்மேற்பார்வையில் இப்பொழுதே விசாரணை நடத்துக!

                                    **********

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்த பொழுது மோடி அரசாங்கம் மக்களை உளவு பார்ப்பதில்தீவிர கவனம் செலுத்தியது. கிரிமினல் குற்றம்! பொறுப்பற்ற அரசு!

                                    **********

இரண்டாவது அலையில் மோடி அரசாங்கம் சரியான நேரத்தில் பொருத்தமாக செயல்பட்டிருந்தால் 1.3 கோடி தொற்றுகளையும் ஒருஇலட்சம் உயிரிழப்புகளையும் தடுத்திருக்க முடியும் என கரண்தாப்பாருக்கு அளித்த பேட்டியில் பேராசிரியர் பிரம்மர் முகர்ஜி கூறுகிறார். இது பேரதிர்ச்சியாக உள்ளது. மோடி அரசின் மதிப்பீடுகள் என்னவாக இருந்தது? பெருந்தொற்றை எதிர் கொள்ளும் திறன் அரசுக்கு இருந்ததா?மோடி அரசாங்கம் மக்கள் தமது உயிரை தாமே பாதுகாத்துக்கொள்ளுமாறு விட்டுவிட்டது. மாநில அரசாங்கங்கள் மீது பழி போட்டது. நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பதில் சொல்ல நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.

                                    **********

கேரளாவின் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து பலரும் விமர்சனம் செய்கின்றனர். பா.ஜ.க. ஆதரவாளர்கள் அவதூறு செய்கின்றனர். ஆனால் கரண்தாப்பாருக்கு அளித்த பேட்டியில் உலக புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர் ககன்தீப் கங் கூறுவதை கேளுங்கள்:

கேரளா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தேசத்துக்கே முன்மாதிரியாக உள்ளது; 

அதிக எண்ணிக்கை என்பது அதிக சோதனைகள் காரணமாக! ஒரு நாளைக்கு 1.4 லட்சம் பரிசோதனைகள்! கேரளாவைவிட இரு மடங்கு மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் 50 ஆயிரம் பரிசோதனைகள்தான் செய்கின்றன; 

தொற்று உள்ள ஒவ்வொருவரின் தொடர்புகளும் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன; 

 சுவாசக்கருவிகள் கொண்ட படுக்கைகள் உட்பட அனைத்து படுக்கைகளும் 50 சதவீதம் காலியாக உள்ளன; 

 சுகாதார கட்டமைப்புகளில் நெருக்கடி இல்லை;

தடுப்பூசிகள் மிக அதிகமாக செலுத்திய  மாநிலம் கேரளா;

கிராமங்கள்/வார்டுகள் அடிப்படையில் தொற்று பரவல் விகிதம் கண்டுபிடிக்கப்பட்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஊரடங்குகள் 4 விதமாக அமலாக்கப்படுகின்றன.

                                    **********

25 சதவீத தடுப்பூசிகள் தனியாருக்கு மோடி அரசு ஒதுக்கியது. தனியார் மருத்துவமனைகள் ஏராளமான தடுப்பூசிகளை கை வசம் வைத்துள்ளன. தனியார் தம் பங்கை செலுத்தவில்லை என கூறுகிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். மோடி தடுப்பூசிக் கொள்கை தோல்வி என்பதுதான் இதன் பொருள். நமது ஏழை அண்டை நாடுகள் உட்பட பெரும்பாலான தேசங்கள் தடுப்பூசிகளை இலவசமாகவே செலுத்துகின்றன. அமெரிக்காவில் கூட அரசாங்கம் தனியாருக்கு விலை கொடுக்கிறது; ஆனால் குடி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடுகிறது. தனியாருக்கு 25 சதவீத ஒதுக்கீடு மூலம் தனது அரசுக்கும் கட்சிக்கும் நிதி வரவு மீது மோடி அரசு கண் வைக்கிறது. தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துங்கள். மூன்றாவது அலையை தடுங்கள்.

;