politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி ஆட்சியின் கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோல் பொருட்கள் மீது எக்ஸைஸ் வரி எனப்படும் கலால் வரி 217% உயர்த்தப் பட்டுள்ளது. பெட்ரோல்/ டீசல் விலை உயர்வுக்கு இது மிக முக்கிய காரணம். மக்கள் மீது சுமையை உருவாக்கும் இந்த உயர்வு திரும்பப் பெறப்படவேண்டும். சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகள் குறையும் பொழுதுமோடி அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்திவருகிறது. 2014ஆம் ஆண்டு பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.47.12  ஆக இருந்தது. 2021 ஆம்ஆண்டு இது 29.34 ஆக குறைந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் விலைகள் உயர்த்தப்பட்டன. இந்த அநியாய விலை உயர்வு போக்குவரத்து செலவை அதிகப்படுத்தும். இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். இதன் விளைவாக ஏற்கெனவே உள்ள பொருளாதார மந்தம் மேலும் மோசமாகும்.மோடி அரசாங்கம் தனது கூட்டுக் கொள்ளை களவாணிகளுக்கு ஏராளமானநிதி சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. இதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட பெட்ரோல்/ டீசல்/ சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்படுகின்றன. ஏற்கனவே பெருந்தொற்று மற்றும் பொருளாதார மந்தம் என்னும் இரட்டை சுமைகளால் துன்பப்படும் மக்கள் மீது பெட்ரோல் விலை உயர்வும் சுமத்தப்படுகிறது. இது அனுமதிக்கப்படக்கூடாது.

                                                                           ************************    

1946ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கப்பற்படை எழுச்சிதொடங்கியது. இந்து/முஸ்லிம்/ சீக்கிய கிறிஸ்தவ அனைத்து மதங்களை சார்ந்த கப்பற்படை வீரர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த இந்த மாபெரும் போராட்டம்இந்திய பன்முக தேசியத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. வீரர்கள் வெளிப்படுத்திய இந்திய தேசியம் என்பது இந்துத்துவா தேசியத்திற்கு முற்றிலும் முரண்பட்டது. இன்று ராணுவத்தைக் கூட மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன. கப்பற்படை எழுச்சியை நினைவு கூர்வது என்பது இன்றைய பாசிச/ மதவாத செயல்களுக்கு எதிராக அனைத்துசக்திகளும் ஒன்றுபடுவது என்பது பொருளாகும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;