politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தலைமை தளபதி பிபின் ராவத்:- ஜம்மு - காஷ்மீருக்கென, ராணுவத்தில் தனியாக ஒரு படைப் பிரிவு உருவாக்கப்படும்.

ச.சா - தனி உரிமைகள் வரலாற்றுத் தேவை.. அத ரத்து பண்ணிட்டு தனி ராணுவத்தக் கொண்டு வர்றது எவ்வளவு கொடூரம்..!!

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்:- பயங்கரவாதிகளின் புகலிடமாக, பாக்., இனியும் இருக்காது.
ச.சா - இருக்கக்கூடாதுன்னதான உங்க நாட்டோட சாதாரண மக்கள் நினைக்குறாங்க..!!
 

செய்தி :- இந்தியாவில் நுழைய பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ்க்கு தடை.
ச.சா - ஆதரிச்சுப் பேசுவார்னு நெனச்சு விசா கொடுத்துட்டாங்களோ..??
 

தமிழக அமைச்சர் தங்கமணி :- படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும்.
ச.சா - ஏற்கனவே மூடுன கடைகள வேற இடத்துல திறக்குறதுக்கு ஏற்பாடு நடக்குதாமே..??

;