politics

img

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க பாஜக முன்மொழிகிறது - டி.ராஜா கண்டனம்

சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்க, பாஜக முன்மொழியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில சட்டசபை தேர்தலுக்காக போட்டியிடும் பா.ஜ.க இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் வீர சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க, தேசிய ஜனநாயக கூட்டணியிடம் வலியுறுத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு விழாவை நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் அவரது படுகொலை வழக்கில் ஒரு குற்றவாளியான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க கோருவது  முரணாகும். மேலும் சாவர்க்கரை தொடர்ந்து காந்திஜியின் கொலையாளியான நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க முன்வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

;