politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நவீனும் ஜானகியும் ஆடிய நடனம் வைரலாக பரவியது. பலரும் இதனை விரும்பி பார்த்து ரசித்தனர். நவீன் தனது முழு பெயர் நவீன் ரசாக் என கூறிய பின்னர் மலையாள இந்துத்துவா கும்பல் மதவெறியை கிளப்ப முயன்றது. இது “டான்ஸ் ஜிகாத்” எனவும் கூச்சலிட்டது.

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து தமது நடனம் மூலம் மதவாதிகளுக்கு பதில் அளித்துள்ளனர். “steps against hatred” அதாவது ‘வெறுப்புக்கு எதிரான நடனம்’ என ஹேஷ்டேக் செய்துள்ளனர். “நீங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினால் அந்த வெறுப்பை நாங்கள் எதிர்ப்போம்” என பதில் நடனமாடிய அவர்களின் செயல் மீண்டும் வைரலாகியுள்ளது.

                               *****************

பாஜக அல்லாத பல மாநில அரசாங்கங்கள் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக புகார் கூறுகின்றனர். அனைத்து வயது வந்தவர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்த பாஜக மத்திய அரசாங்கம் உடனடி திட்டத்தை அமலாக்க வேண்டும். பிரதம மந்திரி அவர்களே! கும்பகர்ண தூக்கத்திலிருந்து கண் விழியுங்கள்!

                               *****************

இந்திய கடல் பகுதியில் இந்தியாவின் அனுமதி இல்லாமலேயே அமெரிக்க கடற்படை போர் பயிற்சி! இந்தியாவின் கடல்பகுதி உரிமைக்கு சவால் என பகிரங்க அறிவிப்பு.இந்த அப்பட்டமான அத்து மீறலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் சுயசார்பு உரிமை குறித்து பாஜகவின் பலவீனமான அணுகுமுறை இந்தியாவின் நலன்களை சிதைக்கும் வண்ணம் உள்ளது.

                               *****************

வெறுப்பையும் பிளவையும் உருவாக்கும் மனோநிலை கொண்டவர்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரியின் இந்த இளம் மாணவர்களான ஜானகியும் நவீன் ரசாக்கும் மிக இயற்கையாக இதயத்திலிருந்து வெளிப்படுத்தும் மகிழ்ச்சியையும் தோழமையையும் பொறுத்து கொள்ள முடியாது! இந்த மதவாத  வெறுப்பு கும்பல் விஷத்தை கக்குவதை மட்டுமே அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் வெற்றி அடையமாட்டார்கள். மேலும் பல மாணவர்கள் இணைந்து மிகச்சரியான பதிலடி நடனத்தை-வெறுப்புக்கு எதிரான நடனத்தை -வெளிப்படுத்தியுள்ளனர். இதுதான் மனித நேயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு!


 

;