politics

img

வெறுப்பை விதைக்கும் அரசியலுக்கு எதிராக அன்பைச் செலுத்தும் அரசியலை உயர்த்திப்பிடிப்போம்

புதுதில்லி, மே 29- ஆர்எஸ்எஸ், பாஜகவின் பெரும் பான்மை மதவெறி,தேசியவெறி அரசியலுக்கு எதிராக அனைத்துத்தரப்பு மக்களிடமும் அன்பைச் செலுத்தும் அரசியலை உயர்த்திப்பிடிப்போம் என்று இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி இந்திய மாணவர் சங்க மத்திய நிர்வாகக் குழுஅறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்கள் பாஜகமற்றும் நரேந்திர மோடிக்கு ஆதரவாகமிகப் பெரிய அளவில் வாக்களித்து,அவர் இரண்டாவது முறையும் பிரதமராவதற்கு ஏற்றவிதத்தில் வாக்களித்துள் ளனர். ஆர்எஸ்எஸ்,பாஜக மற்றும் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் மத்தியில் எப்படியெல் லாம் இந்து மதவெறி மற்றும் தேசியவெறியை ஊட்டி வளர்த்து, மக்களிடையே பிளவினை ஏற்படுத்தியது என்பதை நாம் பார்த்தோம்.இந்திய நாகரிகத்தின் மிகச் சிறப் பான குணமான, ‘வேற்றுமையில் ஒற்றுமை காணும்’ மாண்பினையே வெட்டிச்சாய்த்திடும் விதத்தில் இந்துத்துவா மதவெறி நஞ்சை மக்கள்மத்தியில் ஊட்டி வளர்த்தது. இந்தியாவை, இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண் டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குறிக்கோளை அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், பாஜகவும் நரேந்திர மோடியும் தலித்துகள், சிறுபான்மையினர் முதலானவர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பதற்கு சமூகவிரோத சக்திகளைச் சுதந்திரமாக அனுமதித்தனர். அதன்மூலம் அவர்கள் மத்தியில் எப்போதும் ஒருவிதமான அச்ச உணர்வு இருந்திடும் விதத்தில் அவர்களை மாற்றியமைத்தனர். ஏனெனில் அவர்கள் விரும்பும் இந்து ராஷ்ட்ரத்தில்இவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். இத்தகைய கிரிமினல்கள் மீது மோடிஅரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அவர்களை வளரவிட்டிருப்பதன் மூலம், நாடு முழுவதும் இத்தரப்பு மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதை நன்கு காண முடிகிறது.இத்தகைய பின்னணியில்தான், பாஜக மற்றும் மோடி மீண்டும் ஆட்சிஅமைக்கக்கூடிய விதத்தில் வெற்றிபெற்றிருப்பது, இத்தகைய மதவெறி கிரிமினல்களுக்குத் தங்கள் கிரிமினல் நடவடிக்கைகளை முஸ்லிம்கள்,தலித்துகளுக்கு எதிராக மேலும் மோசமான முறையில் தொடர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள், தலித்துகள் மீது வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் இதனை நன்கு காண முடிகிறது. மதச் சிறுபான்மையினர் ஒருவிதமான அச்ச உணர்வுடன் கையறு நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. மதச்சிறுபான்மையினர் மேம்பாட்டுக் காகப் பாடுபடுவேன் என்று மோடி சமீபத்தில் அறிவித்ததெல்லாம் நாடகமே தவிர வேறல்ல. இவ்வாறு இவர் கூறுவதற்கு ஒரு நாள் முன்னதாக சமீபத்தில்மத்தியப்பிரதேசத்தில் மூன்று முஸ்லிம்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிகழ்வு குறித்து கண்டனம் தெரிவிக்கக்கூட அவர் தயாரில்லை.இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவை ஓர் இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதித்திட மாட்டோம் எனஇந்திய மாணவர் சங்கம் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறது. பாஜக மற்றும் மோடி வகையறாக்களின் மதவெறி வன்முறை வெறியாட்டங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பக்கம் இந்திய மாணவர் சங்கம் உறுதியாக நிற்கும். இம்மண்ணில் அன்பைச் செலுத்தும் அரசியலுக்கு எதிராக, வெறுப்பை விதைக்கும் அரசியல் வெற்றி பெறுவதற்கு இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக் காது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)

;