politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேச தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த சக்திகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. வெறுப்பை விதைக்கிற, கொடிய படுகொலைகளை அரங்கேற்றுகிற சித்தாந்தம்தான் அவரை படுகொலை செய்தது. அந்த சக்திகளை இனியும் நாம் அத்தகைய கொடூரங்களை தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அந்த சித்தாந்தத்தை தூக்கிப் பிடிப்பவர்களுடன் போரிடுவோம்; அவர்களை பின்னுக்குத் தள்ளி தேசத்தை பாதுகாப்போம்.

                                                                                 ********************* 

உலக மக்களை காக்கும் உலகளாவிய உண்மைகளும் கோட்பாடுகளும் எந்தவிதமான ஒடுக்குமுறையாலோ அல்லது வன்முறையாலோ கொன்று அழித்துவிடக் கூடியவை அல்ல.

                                                                                 ********************* 

காவல்துறை பாதுகாப்புடன் குண்டர்களை ஏவி விவசாயிகளை தாக்குகிறது மோடி அரசு. இப்படித்தான் இவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தாக்குதல் நடத்தினார்கள். அதை நாம் மறந்துவிட முடியாது; மன்னிக்கவும் முடியாது. மோடி அரசாங்கத்தின் இத்தகைய இழிவான சூழ்ச்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது.அப்படியானால் இன்னும் வலுவான போராட்டப் பேரலையாக மாற வேண்டும். உத்தரப்பிரதேசத்தின் முபாசர் நகரில் உடனடியாக லட்சக்கணக்கானவிவசாயிகள் கூடினார்களே, அதேபோல எழுச்சிகள் தொடரட்டும். மோடி அரசே, வேளாண் சட்டங்களை முற்றாக வாபஸ் பெறுக!

                                                                                 ********************* 

கூட்டுக் களவாணிகளின் ராஜ்ஜியம் இது. அந்த அந்தக் கூட்டுக் களவாணிகளுக்காகவே மோடி அரசாங்கம் நடைபெறுகிறது. ஒவ்வொரு தனித்தனி இந்தியரின் கொடிய துன்ப துயரத்திலிருந்து இந்தக் கூட்டுக் களவாணிகள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாகனம் வைத்திருக்கும் நடுத்தர மக்களும், சாதாரண மக்களும் பெட்ரோல்- டீசலுக்காக மிக மிகக் கூடுதலான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூலித் தொழிலாளர்கள் தங்களது வேலைகளையும், கூலிகளையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தங்களது விளை பொருளுக்கு விலை கிடைக்காமல் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நரேந்திர மோடியின் மிக நெருங்கிய இரண்டே இரண்டு கூட்டுக் களவாணிகள் நிமிடத்திற்கு நிமிடம் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;