புதுதில்லி,செப்.21- தில்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுள்ளார்.
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஜாமின் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தனது முதலமைச்சர் பதவியைக் கடந்த 17ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி கல்வித்துறை அமைச்சருமான அதிஷி செப்டம்பர் 21ஆம் தேதி பதவியேற்பார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அதிஷி இன்று தில்லி முதலமைச்சராகப் பதவியேற்றார்.