திருவண்ணாமலை, ஏப்.14-தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்துள்ளதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் என திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.திருவண்ணாமலை மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்தும்,ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்தும் ஞாயிறன்று(ஏப்.14) வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே நடைபெற்றகூட்டத்தில் உரையாற்றிய அவர், “தமிழகத்தில், 8 வழிச் சாலையினால் பல ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மற்றும்விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாக இருந்தது. இந்தத்திட்டத்தை ஒன்றுபட்ட போராட்டத்தால் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது” என்றார்.ஆரணி தொகுதியில் பேசிய போது, திண்டிவனம் - ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரயில் பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது. நெசவாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் பட்டு ஜவுளிபூங்கா அமைப்பதாக வாக்குறுதி மட்டுமே உள்ளது நடைமுறைப் படுத்தப்படவில்லை” என்றார்.திருவண்ணாமலை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி எம்.வீரபத்திரன், மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.