புதுதில்லி, மே 17-இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் பிரச்சாரம் மே 17 வெள்ளி மாலை 5 மணியுடன் முழுமை யாக நிறைவுபெற்றது. மே 19 அன்று ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு ஏப்ரல்11 அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடர்ந்து ஆறு கட்டங்கள் தேர்தல் நடைபெற்று, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் உச்சக்கட்ட பிரச்சாரம் நடந்து வந்தது. இந்தப் பிரச்சாரம்வெள்ளி மாலையுடன் ஓய்ந்தது. இத்து டன் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முழுமையாக முடிவடைந்துள்ளது. மே 19 ஞாயிறன்று பீகாரில் 8 தொகுதி கள், இலாச்சலப் பிரதேசத்தில் 4தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், மத்தியப்பிரதேசத்தில் 8 தொகுதி கள், பஞ்சாப்பில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி என 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதற்கு முன்பு நடைபெற்ற நாடாளு மன்ற பொதுத் தேர்தல்களை விட 17வது மக்களவைத் தேர்தல் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள தேர்தலாக அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக ஒழித்து பாசிச இந்துத்துவா நாடாக மதச்சார்பற்ற இந்தியாவை மாற்றிட கங்கணம் கட்டி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைமை யிலான பாஜகவின் எதேச்சதிகார பிர தமர் மோடியை ஆட்சியிலிருந்து தூக்கியெறிவதற்கான தேர்தலாக இத்தேர்தல் அமைந்துள்ளது. அந்த இலக்கோடு அனைத்து மாநிலங்களி லும் எதிர்க்கட்சிகள் அணி திரண்டு இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளன.ஐந்தாண்டுகால மோடி ஆட்சியில்மக்கள் அடைந்த துன்ப துயரங்களுக்கு முடிவு கட்டும் விதமாகவும், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட கொடும் தாக்குதல்களால் இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை ஒட்டு மொத்தமாக நொறுக்கிய மோடி ஆட்சியை வீழ்த்தும் விதமாகவும் ஆறுகட்டத்தேர்தலிலும் மக்கள் பதிலடி கொடுத்திருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழகம்
தமிழகத்தில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப் பாக தமிழகத்தில் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மே 19அன்று நான்கு சட்டமன்றத்தொகுதி களுக்கும் என மொத்தம் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வந்துள்ளது. இத்தேர்தலிலும் மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்; வாக்களிப்பார்கள் என்று உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு, தமிழகத்தில் அதிமுகஆட்சியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம்ஏற்படுவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இந்தத் தேர்தல் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் என்று திமுக கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கம்
இந்தத் தேர்தலில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மேற்குவங்கம். மேற்குவங்கத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி அனைத்து தொகுதிகளிலும் மக்களின்பேரெழுச்சியோடு இத்தேர்தல் களத்தை சந்தித்திருக்கிறது. இடதுசாரிகள்மீண்டும் எந்தவகை யிலும் முன்னிலைபெற்றுவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த கார்ப்பரேட் ஊடகங்களும்கங்கணம்கட்டி செயல்பட்டன. இடது சாரிகளைப் பற்றியும் இடதுமுன்னணி
கோரிக்கை மகஜரில் மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பெண்ஊழியர்கள் மத்தியில் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துகள் பெறப்பட்டு, ராஜ்பவன் நோக்கி பேரணிநடத்தப்பட்டு கவர்னரிடம் கோரிக்கை மகஜர் அளிக்கும் இயக்கமும் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து மண்டலங்களில் பல்லாயிரகணக்கான பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்ட உழைக்கும் பெண்கள் பேரணிகளையும் நாம் நடத்தியுள்ளோம்.டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பெண் தொழிலாளர் பேரணியில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான உழைக்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.மார்ச்-8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அகில இந்திய கமிட்டியின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு வருடமும் மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் கடைப்பிடித்து வருகிறோம். அரசுத் துறை அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்கிறோம்.
யின் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றியும் முற்றிலும் அவதூறான செய்திகளை தினந்தோறும் வெளியிட்ட வண்ணம் இருந்தன. இவை அனைத்தையும் மீறி மேற்குவங்கத்தில் இடதுமுன்னணியின் தலைவர்கள் எழுச்சிமிக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மறுபுறம் மேற்குவங்கத்தில், ஆளும் திரிணாமுல்காங்கிரசும், மத்தியில் ஆளும் பாஜகவும், இந்த முறை மேற்குவங்கத்தை தங்கள் வசமாக்கிட வேண்டும் என்ற வேட்கையுடன் முற்றிலும் வன்முறைப் பாதையில் இத்தேர்தலை எதிர்கொண்டன. இம்மாநிலத்தில் ஏழு கட்டங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்தஆறு கட்டங்களிலும் பல்வேறு தொகுதிகளில்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கூட பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் வன்முறையை மட்டுமே கையில் ஏந்திக் கொண்டிருந்தன. இடதுமுன்னணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிந்த தொகுதிகளில் பாஜகவும், திரிணாமுல்லும் கைகோர்த்து இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறையை ஏவினர். இதுதவிர மாநிலம் முழுவதும் இருதரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டது போல தோற்றத்தை ஏற்படுத்தினர். பாஜக இந்துத்துவா மதவெறியையும், மம்தா கட்சி அதற்கு எதிரான மத அடிப்படைவாதத்தையும் ஒருவருக்கொருவர் ஊட்டி வளர்த்ததை இந்தத் தேர்தல் காலம் முழுவதிலும் வங்க மக்கள் பார்த்தனர்.
பிரகாஷ் காரத் பேட்டி
இத்தகைய வன்முறை அரசியலுக்கு இத்தேர்தலில் வங்க மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.தேர்தல் பிரச்சாரக் களத்தில் கட்சியின்பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பிமன்பாசு,முகமது சலீம், திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், மேற்குவங்க மாநில செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் மேற்குவங்கத்தில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். பல இடங்களில் மம்தா கட்சி குண்டர்களின் வன்முறையை எதிர்கொண்டு இந்தப் பிரச்சாரம் எழுச்சியோடு நடைபெற்றதை சுட்டிக்காட்டியுள்ள பிரகாஷ் காரத், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தனது அட்டூழிய அராஜக அரசியலால் இந்துத்துவா சக்திகள் வளர்வதற்கு ஒரு களமாக வங்கத்தைமாற்றியிருக்கிறது. பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் முற்றிலும் மதவெறி அரசியலை முன்னிறுத்துகின்றன. இவர்கள் இருவரையும் மட்டுமே தேர்தல் களத்தில் முன்னிறுத்திய கார்ப்பரேட் ஊடகங்கள், திரிணாமுல் கட்சியின் கூலிப்படை வன்முறை அரசியலுக்கு மாற்றாக பாஜகவை முன்னிறுத்தின. இப்போது நினைவுகூர வேண்டியதுஎன்னவென்றால், 1998-99 தேர்தலில் திரிணாமுல் உதவியுடன்தான் வங்கத்தில் முதல் முறையாக ஒரு இடத்தில் பாஜக வெற்றிபெற்றது. இப்போது இவர்கள் இருவரும் மதரீதியாக வங்க மக்களை பிளவுபடுத்தி முற்றாக வங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இத்தகைய மதவெறி அரசியலை வங்க மக்கள் உறுதியாக முறியடிப்பார்கள் என நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.
மேலும் 17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எந்தவிதத்திலும் பெரும்பான்மை பெற முடியாது எனக் குறிப்பிட்ட பிரகாஷ் காரத், பாஜக அல்லாதஒரு மதச்சார்பற்ற ஒரு மாற்று அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், தேர்தல் முடிவுக்குப் பிறகு எழுகிற புதிய சூழலில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட்டு ஒருமாற்று மதச்சார்பற்ற கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முன்வர வேண்டும் எனவும் கூறினார். அத்தகைய மக்களவையில் இடதுசாரிகளின் இருப்பு பலப்படுமானால் மக்கள் நலக் கொள்கைகள் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் பிரகாஷ்காரத் கூறினார்.
மோடி பேட்டி
இதனிடையே, ஐந்தாண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் நரேந்திர மோடி, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, தமது ஆட்சியின் இறுதித் தருணத்தில், வெள்ளியன்று மாலை தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பாஜக தலைவர் அமித்ஷாவுடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசியஅவர், 2014ம் ஆண்டில் பெற்ற வெற்றியைவிட அபாரமான பெரும்பான்மையுடன் மீண்டும்ஆட்சி அமைப்போம் என்று தமது நப்பாசையை வெளிப்படுத்தினார். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகள் அனைத்துக்கும் அமித்ஷாவே பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கத்தில் முற்றிலும் வன்முறை பிரச்சாரத்தை மேற்கொண்ட திரிணாமுல் - பாஜகவை கண்டித்தும், பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரச்சாரத்தையொட்டி கொல்கத்தாவில் மக்களின் அன்பைப் பெற்ற மகத்தான சமூக சீர்திருத்தவாதியும், தலைசிறந்த கல்வியாளருமான ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலையை பாஜக குண்டர்கள் உடைத்து நொறுக்கியதைக் கண்டித்தும், இவர்களது வன்முறையை தடுத்து நிறுத்தாமல் அதை சாக்காகக் கொண்டு மேற்குவங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை ரத்து செய்து உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் கொல்கத்தாவில் இடது முன்னணி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிமன் பாசு, முகமது சலீம், மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.