politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோசடியின் உச்சம்! அரசாங்க அறிவிக்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதி குறித்து தகவல் அறியும் சட்டத்தில் எதுவும் வெளிப்படுத்த வேண்டியதில்லை எனக் கூறுகின்றனர். பொதுத்துறை ஊழியர்கள்/ராணுவ ஊழியர்கள்/அரசாங்க ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இந்த நிதிக்கு பங்களிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால் இந்த நிதி வெளிப்படையாக இருக்காதாம்; தணிக்கைக்கு உட்பட்டது இல்லையாம். அப்படியானால் இந்தப் பணம் எங்கே?


வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்துவதற்கு மோடி அரசாங்கம் முன்வைக்கும் கூற்றுகளை நம்ப முடியவில்லை. ஏனெனில் எவ்விதகலந்தாலோசனைகள் இல்லாமலேயே இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமலேயே தகிடு தத்தம்செய்து நிறைவேற்றப்பட்டன. எனவே அவர்கள் கூறுவதை எப்படிநம்புவது?


விவசாயிகளுக்கு ரூபாய் 18 ஆயிரம் கோடி உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடி பீற்றிக் கொள்கிறார். ஆனால் உண்மை என்ன? தேர்தலுக்குமுன்பு அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கடைசி தவணைதான் இது.


வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளாவில் ஏன் போராட்டங்கள் இல்லை எனக் கேட்கிறார் பிரதமர். ஆனால் கேரளாவில் தினமும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற விசேட சட்டமன்ற கூட்டம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆளுநர் அதை தடுக்கிறார். அப்பட்டமான அரசியல் சட்ட மீறல்! மீண்டும் சட்டமன்றம் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த 150% குறைந்த பட்ச ஆதார விலை அமலாக்குகிறோம் என்று பிரதமர் கூறிக்கொள்கிறார். இது அப்பட்டமான பொய். 150% என்பதில் சுவாமிநாதன்  ஆணையம் முன் வைத்ததற்கும் மோடி அரசாங்கம் அமலாக்குவதற்கும் 30 சதவீதம் குறைவாக உள்ளது.


மாத ஊதியம் வாங்கும் ஒவ்வொரு 100 பேரில் 21 பேர் வேலை இழந்துள்ளனர். இது ஆபத்து மணி அடிக்கும் தகவல்! 87 மில்லியன் மாத ஊதியம் வாங்குவோரில் 20% பேருக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வேலையை இழந்தவர்கள் நிலை என்ன? வருமான வரி வரம்புக்கு வெளியே இருப்பவர்களுக்கு நேரடி நிதி உதவியும்இலவச உணவு தானியங்களும் தராமல் அவர்கள் எப்படி வாழ முடியும்? அவர்களிடம் வாங்கும் சக்தி இல்லாமல் பொருளாதாரம் மீட்சி பெறாது.


கேரளா குறித்து பொய்களை அள்ளி விடுகிறார் பிரதமர் மோடி! கேரளாவில் அரிசிக்கு ஆதார விலை  குவிண்டாலுக்கு ரூ 2748. மோடி அரசாங்கம் தருவது ரூ 1748. கேரளா ரூ900 அதிகமாக கொடுக்கிறது. கேரளாவின் விலையை தருவதற்கு மோடி தயாரா? கேரளாவில் மட்டும்தான் 16 வகையான காய்கறிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுகிறது. ஒரு எக்டேருக்கு அரிசிக்கு ரூ22,000 காய்கறிகளுக்கு 25,000 பருப்பு வகைகளுக்கு 20,000 வாழைப்பழத்துக்கு 30,000 என மானியம் தரப்படுகிறது. இவற்றை அமலாக்க மோடி அரசாங்கத்துக்கு துணிவு உண்டா?


கேரளாவில் மண்டிகள் ஏன் இல்லை என்று மோடி கேட்கிறார். அவர் அறியாமை பரிதாபத்துக்குரியது. கேரளாவில் 82% பணப் பயிர்களான தேங்காய்/முந்திரி/ ரப்பர் /தேயிலை/ காப்பி/ மிளகு /லவங்கம்/ பட்டை ஏலக்காய் /ஆகியவை விளைகின்றன. இந்தப் பயிர்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்த தனித்தனியான வாரியங்களை மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. மோடி அவர்களே! இப்போது சொல்லுங்கள். பொய் சொல்வது நீங்களா? எதிர்க்கட்சிகளா?

**************************

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

 

;