internet

img

கணினிக்கதிர் : கணினி வேலையை சுலபமாக்கும் மென்பொருள்கள்... பிடிஎப் கோப்பை படக்கோப்பாக மாற்ற

பிடிஎப் கோப்புகளை JPG, TIF, BMP, PNG, GIF, WMF ஆகிய படக்கோப்பு வடிவங்களுக்கு ஒரே கிளிக்கில் மாற்ற உதவும் மென்பொருள்தான் weenysoft Free PDF to Image Converter. இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி PDF கோப்புகளை படக்கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதே இணையதளத்தில் பிடிஎப் மாற்றிகள், வீடியோ கன்வெர்ட்டர், கட்டர் போன்ற பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.பதிவிறக்கும் முகவரி: https://www.weenysoft.com/free-video-cutter.html

யுஎஸ்பி பென்டிரைவ் ஃபார்மேட் செய்ய
யுஎஸ்பி சேமிப்பகங்களான Compact Flash, CF Card II, Memory Stick Duo Pro, SDHC, SDXC, Thumb Drive, Pen Driveஆகியவற்றில் எர்ரர் நீக்குதல்,குப்பைகளை நீக்கி சரிசெய்தல், ஃபார்மேட் செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய இம்மென்பொருள் பயன்படுகிறது. யுஎஸ்பி டிரைவை இணைத்தபிறகு FAT, FAT32, exFAT, NTFS வகைகளில் ஒன்றை தேர்வு செய்து குயிக் ஃபார்மேட் (Quick format) அல்லது பாதுகாப்பான ஃபார்மேட் (safe format.) தேர்வு செய்து டிரைவை புதுப்பிக்கலாம். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை http://www.authorsoft.com/usb-disk-storage-format-tool.html என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

ஸ்கிரீன்ஷாட் வேலைகளுக்கு ஒருங்கிணைந்த மென்பொருள்
விண்டோஸ் கணினிகளில் வழக்கமாக உள்ள பிரிண்ட் ஸ்கிரீன் செயல்பாட்டுக்கு மாற்றாக, முழுத் திரையோ, தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட பகுதியையோ நம் விருப்பப்படி படம்பிடிக்க உதவும் மென்பொருள் ஷேர்எக்ஸ் (ShareX). இம்மென்பொருளில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதுடன், ஸ்கிரீன் ரெக்கார்டிங் வீடியோ மற்றும் ஜிப் (GIF) முறையிலும், படக்கோப்பை எழுத்தாக மாற்றித்தரும் ஓசீர் (OCR) வசதி, கலர் பிக்கர், எடிட்டர், QR கோட் ரீ்டர் ஸ்கேனர், கிரியேட்டர் உள்ளிட்ட பல வசதிகளையும் தருகிறது. அத்துடன் இணையத்தில் படங்களை கோப்புகளை இம்மென்பொருள் கொண்டு அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது. இவ்வசதியில் டிராப் பாக்ஸ், யுடியூப், ஒண்டிரைவ், கூகுள் டிரைவ், போட்டோ பக்கெட், டிவிட்டர், ஃபேஸ்புக், மின்னஞ்சல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தளங்களில் நேரடியாக அப்லோட் செய்து கொள்ளமுடியும். அப்லோட் செய்த கோப்பை மற்றவர்களுக்கு பகிர இணைப்புகளை சுருக்கித் தரும் bit.ly, turl.ca, vurl.com. tinyurl.com உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்கியுள்ளன. பல வேலைகளை ஒருங்கிணைத்துத் தரும் இம்மென்பொருளை https://getsharex.com/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

கணினி இயக்கத்தை நிறுத்த உதவும் மென்பொருள்..
கணினியில் ஷட்டவுன், ரீஸ்டார்ட், ஹைபர்னேட், லாக்ஆஃப் வசதிகள் வழக்கமாக அமைந்திருக்கும். இந்த வசதிகளைத் தாண்டி குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்வது, ஹார்ட் டிஸ்க் இயக்கத்தை நிறுத்தும் Sleep மற்றும் Standby கட்டளை ஆகியவற்றை இம்மென்பொருள் நம் விருப்பத்திற்கேற்ப நிர்வகிக்கும் டோண்ட் ஸ்லீப் (DontSleep) என்ற இம்மென்பொருள் போர்ட்டபிள் வடிவத்திலும் கிடைக்கிறது. விண்டோஸ் 32 பிட் மற்றும் 64 பிட் கணினிகளுக்கு தனித்தனியே கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்ய http://www.softwareok.com/?Download=DontSleep

கிளிப்போர்ட் தகவல்களை பதிவு செய்து பயன்படுத்த
கணினிப் பயன்பாட்டில் வேர்ட், எக்செல் போன்ற மென்பொருள்களில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்யும் முறையில் ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே அவ்வாறு பேஸ்ட் செய்யமுடியும். விதவிதமான டெக்ஸ்ட் தகவல்களை மாற்றி மாற்றி பேஸ்ட் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் மீண்டும் காப்பி செய்யவேண்டும் அல்லது ஒரு வரிசை முடிந்த பிறகு அடுத்த வரிசையில் காப்பி பேஸ்ட் செய்யத் தொடங்கவேண்டும். இதுபோன்ற சமயங்களில் உதவுவதற்கு உதவும் மென்பொருள் தான் குயிக் டெக்ஸ்ட் பேஸ்ட் (Quick Text Paste ). இம்மென்பொருளில் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டிய ஒன்றிற்கு மேற்பட்ட டெக்ஸ்ட்களை தனித்தனியே காப்பி செய்து பதிவாக்கி எந்த ஒரு மென்பொருளில் பேஸ்ட் செய்யலாம். ஒவ்வொறு தகவலுக்கும் தனித்தனியே ஷார்ட்கட் அமைத்துக் கொண்டால் குறிப்பிட்ட தகவலை பேஸ்ட் செய்யவேண்டிய இடத்தில் கர்சரை வைத்து ஷார்ட் கட் கமாண்ட்டை கிளிக் செய்தால் போதும் அந்த இடத்திற்கான தகவல் பேஸ்ட் செய்யப்படும். இந்த கிளிப்போர்ட் தகவல்களை சேமித்து வைத்தும் பிறகு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. இன்ஸ்டால் செய்யும் EXE மென்பொருளாகவும், நேரடியாக பதிவிறக்கி பயன்படுத்தும் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைக்கிறது. 142 kb அளவுள்ள மிகச்சிறிய மென்பொருள் இது. பதிவிறக்கம் செய்யவேண்டிய முகவரி: http://softwareok.com/?Download=QuickTextPaste

===என்.ராஜேந்திரன்===

;