internet

img

ட்ரெண்டாகும் "ஆர்.ஐ.பி டிவிட்டர்" என்ற ஹேஷ்டாக்!

டிவிட்டரில் "ஆர்.ஐ.பி டிவிட்டர்" (#RIPTwitter) என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்கள் அந்நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டன. உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பணி நீக்கம், ப்ளூடிக்கிற்கு கட்டணம் என இவரது செயல்பாடுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. சமீபத்தில் "தீவிரமாக நீண்ட நேரம் பணியாற்றுங்கள் அல்லது வெளியேறுங்கள்" என்று எலான் மஸ்க் தெரிவித்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான டிவிட்டர் ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், டிவிட்டர் அலுவலகங்கள் நவம்பர் 21 வரை மூடப்படுகிறது என அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. 
இந்த நிலையில் ட்விட்டரில் #RIPTwitter என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல், #GoodByeTwitter மற்றும் #TwitterDown ஆகிய ஹேஷ்டாக்களும் ட்ரெண்டாகி வருகிறது. 
 

;