ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
ட்விட்டரில் டெஸ்க்டாப் பதிப்பு மாற்றியமைக்கப்பட்டு, புதிய அம்சங்களுக்கான அப்டேட் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. இதில், இனி பயனர்கள் ஏழு இந்திய மொழிகளில் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் பெரிய அப்டேட்டாக இது பார்க்கப்படுகிறது. இதில் பயனர் அனுபவத்தை மொபைல் தளங்களில் இருப்பதை போன்று மாற்றப்படுகிறது. இனி டேட்டா வேகம் குறையும் போதும், தளத்தை சீராக இயக்க முடியும்.
இந்தியாவில் ட்விட்டர் தளத்தினை தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கும். இத்துடன் புதிய தளத்தில் டிரான்ஸ்லேஷன் எனப்படும் மொழிமாற்றம் செய்யும் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தளத்தில் பல்வேறு மொழிகளில் இயக்க முடியும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வலைத்தள அமைப்பிற்கான பணிகள் நடைபெற்று வந்தது. புதிய அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ள தளத்தின் இடதுபுறத்தில் நேவிகேஷன் பேனல் வழங்கப்படுகிறது. இதில் புதிதாக எக்ஸ்ப்ளோர், லிஸ்ட்ஸ் மற்றும் புக்மார்க்ஸ் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன. ட்விட்டர் மொபைல் செயலியில் ஏற்கனவே எக்ஸ்ப்ளோர் டேப் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் இந்த அம்சம் டெஸ்க்டாப் பதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.