internet

img

மக்களவை தேர்தல் முடிவுகளை நாளை நேரலை செய்யும் யூடியூப்!

மக்களவை தேர்தல் முடிவுகளை நாளை வெளியாக உள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை நேரடியாக ஒளிபரப்ப யூ டியூபில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரசார் பாரதி மற்றும் கூகுள் இணைந்து 2019 பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை யூடியூப் தளத்தில் நாளை நேரலை செய்ய இருக்கின்றன. இதில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேரலை செய்யப்படுகின்றன. இந்தியா முழுக்க யூடியூப் தளத்தை எங்கிருந்து இயக்கினாலும் வலைதள பக்கத்தின் முகப்பு பகுதியில் டி.டி. நியூஸ் வழங்கும் தேர்தல் முடிவுகள் இடம்பெறும். தேர்தல் முடிவுகள் யூடியூப் தளம் மற்றும் மொபைல் செயலி என இரண்டிலும் நேரலை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் தளத்தில் முகப்பு பகுதியில் தோன்றும் இணைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், டி.டி. நியூஸ் யூடியூப் சேனல் திறக்கும். இதுதவிர டி.டி. சேவை கிடைக்கும் 14 இதர மொழிகளில் நேரலையை பார்க்க முடியும். இந்த சேவையில்,

வாக்குப்பதிவு எண்ணிக்கை சார்ந்த விவரங்களை வெவ்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்க இருக்கிறது.