கூகுளின் ஜிமெயில் சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஷெட்யூல் (schedule) வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையானது, உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேலான பயனர்களை கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு புதிதாக ஈமெயிலை ஷெட்யூல் செய்யும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்வதாக அறிவித்தது.
இதை அடுத்து, தற்போது இந்த வசதி முதலில் ஜிமெயில் வெப் வெர்ஷனில் (Web version) மட்டும் கிடைக்கிறது. அதுவும் டெஸ்க்டாப் வியூவில் (Desktop View) மட்டும் இதனை பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் மெயிலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அனுப்பும்படி செய்யலாம். இனி எப்படி இந்த வசதியை பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். இதில், தானாகவே மூன்று நேரங்கள் பரிந்துரைக்கப்படும். அவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். அல்லது Pick date & Time என்பதைத் கிளிக் செய்தால், விருப்பத்திற்கேற்ப தேதி மற்றும் நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். இதில், அதிகபட்சமாக 10 நாட்களுக்கு முன்னும், குறைந்தபட்சமாக 3 நிமிடங்களுக்கு மட்டுமே ஷெட்யூல் செய்ய முடியும்.