india

img

நபிகளுக்கு எதிராக மதவெறி சாமியார் வெறிப்பேச்சு

கடந்த செப்டம்பர் 29 அன்று பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் காசியா பாத் மாவட்டத்தின் லோஹியா நகரில் உள்ள இந்தி பவனில்  இந்துத் துவா அமைப்புகளின் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில் சாமியார் யதி நரசிங்கானந்த்,”தசரா பண்டிகை தினத்தன்று ராவணனின் உருவ பொம்மையை எரிக்கிறோம். ஆனால் இனிமேல் தசரா அன்று  ஒரு வரின் உருவ பொம்மையை எரிக்க வேண்டும். அது நபிகளின் உருவ பொம்மையாக இருக்க வேண்டும்” என பேசினார். 

சாமியார் நரசிங்கானந்தின் இந்த வன்முறைப் பேச்சு, பிரபல சமூக வலைத்தள ஊடக சரிபார்ப்பாளரான முகமது ஜுபைர் மூலமாக ஒரு வாரத்திற்கு பின்பு தேசத்திற்கு தெரிய வந்தது. நரசிங்கானந்தின் பேச்சிற்கு நாடு முழுவதும் கண் டனங்கள் குவிந்தன. கடும் எதிர்ப் பால் அக்டோபர் 5 அன்று நரசிங்கா னந்த் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய் யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிராவின் புனேவில் எஸ்டிபிஐ தொடுத்த புகாரின் அடிப் படையில் 4 பிரிவுகளின் கீழ் நர சிங்கானந்த் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. நரசிங்கானந்த்தின் பேச்சை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப் பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இன்று வரை தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கடந்த ஒருவாரமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

புனேயில் வன்முறை

4 நாட்களுக்கு முன் நரசிங்கா னந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரி வித்து மகாராஷ்டிரா மாநிலம் புனே யில் முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி,  அனைத்து தரப்பு மக்களும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத் தில் இந்துத்துவா கும்பல் கல்வீச்சு நடத்தியதால், அங்கு இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் ஏற் பட்டது. இந்த மோதலில் 21 பேர் காயமடைந்தனர். 10 போலீஸ் வாக னங்களும் சேதமடைந்த நிலையில், போலீசார் தடியடி மூலம் மோதலை கட்டுப்படுத்தியதால் புனேயில் பெரி யளவு வன்முறை தவிர்க்கப்பட்டது.

வன்முறைச் சம்பவங்களை மறைக்கும் “கோடி மீடியா”

மோடி பிரதமர் ஆன பிறகு நாடு முழு வதும் இந்து - முஸ்லிம் மக்களிடை யே மோதல் சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி முதல் சாதாரண உள்ளூர் பாஜக நிர்வாகிகள் வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை கட்டவிழ்த்து விடுவதன் மூல மாகவே இந்து - முஸ்லிம் மக்களிடையே இத்தகைய மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மோடி 3ஆவது முறையாக பிரத மர் ஆன பின்பு இந்து - முஸ்லிம் மக்களின் மோதல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக ஒடிஷா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக வின் அரசியல் சூழ்ச்சியால் இந்து - முஸ்லிம் மக்களி டையே மிக மோசமான அளவில் வன்முறை சம்ப வங்கள் நடந்தன. இந்த மோதல் சம்பவங்களை பாஜக ஆதரவு பெற்ற  “கோடி மீடியா” ஊடகங்கள் மறைத்தும், ஆதாரமற்ற செய்திகளை கூறி திசை திருப்பும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றன. அதா வது இந்து - முஸ்லிம் மக்களிடையே நடைபெறும் மோதலை “கோடி மீடியா” ஊடகங்கள் இருதரப்பு அல்லது இரண்டு பகுதி மக்களின் மோதல் என்றே குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் மோதல் நடை பெறும் இடங்களில் நடைபெறும் போலீசாரின் நடவ டிக்கைகளும் மறைக்கப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் என்றால் மோதலை தூண்டிய இந்துத்துவா குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கா மல், அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் வன்முறைகள் நிகழும் இடங்களில் போலீசார் நடவடிக்கை குறித்த செய்தி கள் மறைக்கப்படுகின்றன. இதற்கு “கோடி மீடியா” ஊடகங்கள் துணை போகின்றன என செய்திகள் வெளியாகி வருகின்றன.

வீடியோவை வெளியிட்டதற்காக முகமது ஜுபைர் மீது வழக்குப்பதிவு

பாஜகவிற்கு மிக நெருக்கமா னவரும், காஜியாபாத்தில் (உ.பி.,) உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரியு மான யதி நரசிங்கானந்த் தனது வன்முறை பேச்சு மூலம் நாடு முழு வதும் மோதலை தூண்டிவிட்டுள்ளார். ஆனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் நரசிங்கானந்தின் மத வெறிப் பேச்சை சமூகவலைத் தளங்களில் வெளியிட்டதற்காக பிரபல சமூகவலைதள உண்மை சரி பார்ப்பாளரான முகமது ஜுபைர் மீது உத்தரப்பிரதேச பாஜக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.