india

img

அமலாக்கத்துறை அலுவலகமல்ல; இது பாஜக கிளை அலுவலகம்... மும்பையிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் பேனர் கட்டிய சிவசேனா கட்சியினர்...

மும்பை:
மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு, இது பாஜகவின் கிளை அலுவலகம் என்று பேனர்கட்டி சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சிக்குவந்த நாள்முதலே, அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் கொண்ட சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளை, தனதுகைப்பாவையாக மாற்றி வைத்திருக்கிறது.

தங்களை எதிர்க்கும் அரசியல் கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்கும், தனது நோக்கத்திற்கு அடிபணிய வைப்பதற்கும் அமலாக்கத்துறையையும், சிபிஐ அமைப்பையும்அது ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்க்கட்சியினரின் நீண்டநாள் குற்றச்சாட்டாகும்.அதற்கேற்பவே, தில்லி, தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்- அங்கிருக்கும் தலைவர்களை குறிவைத்து, சிபிஐ, அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளும், அதன்பின்னர் அங்கிருக்கும் கட்சிகள், தலைவர்கள் பாஜகவுக்குவளைத்து கொடுத்து போவதும் அனைவரும் பார்க்கும் காட்சிகளாகும்.

அந்த வகையில், சமீபகாலமாக பாஜகவின் பார்வை, மகாராஷ்டிராவில் தங்களின் ஆட்சியை அமையவிடாமல் தடுத்த என்சிபி, சிவசேனாதலைவர்களை நோக்கி திரும்பியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்புதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜக-விலிருந்து தேசியவாத காங்கிரசுக்குப் போன ஏக்நாத் கட்சே மற்றும் பிரதாப் சர்நாயக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை மூலம்நோட்டீஸ் அனுப்பி, நெருக்கடி கொடுத்த பாஜக அரசு, தற்போது சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய்ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதாவது, வர்ஷா ராவத், கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு, பிஎம்சி வங்கியில் ரூ. 50 லட்சம் கடன் பெற்று,வீடு ஒன்றை வாங்கியது தொடர்பாக,இப்போது விசாரணை நடத்தப் போவதாகவும், அதற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளது.இது சிவசேனா கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். நாங்கள் உங்களைக் கண்டு பயப்படவில்லை; ஆனால், குழந்தைகள் மற்றும் பெண்களைப் போர்க்களத்திற்கு இழுக்க வேண் டாம்’ என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் காட்டமாக பேட்டி அளித்தார்.மேலும், அரசியல் தலைவர் களின் பழிவாங்குகிறோம் என்ற பெயரில் அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்களை குறிவைத்து மிரட்டுவது கோழைத்தமான செயல் என்றுஆவேசப்பட்ட ராவத், பாஜக-வின்இந்த நடவடிக்கைக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுப்போம் என்றும்; சிபிஐ, அமலாக்கத்துறை பாஜகவின் பிரிவாக செயல்படுகிறது 121 ஆதாரங்களைக் கொண்டகோப்பு தன்னிடம் இருக்கிறது, அதனை விரைவில் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில்தான், சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் இது “பாஜக பிராந்திய அலுவலகம்” ‘Bhajapa (BJP) Pradesh Karyalaya’ என்று பேனர் கட்டி, பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

;