india

img

ஒரே மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி  

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் ரூ1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் அதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த மே மாதம் கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.  

மின்னணு பரிவர்த்தனை கருவி மூலம் மே மாதத்தில் 42 ஆயிரத்து 266 கோடி ரூபாயும் இணையவழி வர்த்தகம் மூலம் 71 ஆயிரத்து 429 கோடி ரூபாயும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் ஒரு கார்டுக்கு சராசரியாக 14 ஆயிரத்து 800 ரூபாய் பரிவர்த்தனையாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.  

இந்த தொகை ஏப்ரல் மாதத்தில் செலவு செய்த தொகையை விட 8 சதவீதம் அதிகம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

;