india

img

மகாரஷ்டிரா: ஒரே ஆம்புலன்சில் 22 சடலங்களை திணித்து ஏற்றி சென்ற அவலம்!

பீட், ஏப்.27-
மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை பிளாஸ்டிக் பேக்குகளில் கட்டி ஒரே ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக பரவி வருகிறது.
மத்திய அரசு, அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக, கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலைக்கு உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன.
மருத்துவமனைகளில் இடம் இல்லை, ஆக்சிஜன் இன்றி நோயாளிகள் உயிரிழப்பு, தடுப்பூசி பற்றாக்குறை போன்ற பல்வேறு சிரமங்கள், நோயாளிகளை கொரோனாவைவிட துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் அம்பஜோகாய் என்ற இடத்தில் உள்ள சுவாமி ரமானந்த் அரசு மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை பிளாஸ்டிக் பேக்குகளில் கட்டி ஒரே ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, இறந்தவர்களின் உறவினர்கள் புகார் அளித்ததால், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

;