india

img

பிராமணர்கள் சொந்த சாதியில் திருமணம் செய்தால் ரூ 3லட்சம் எடியூராப்பாவின் புதிய திட்டம் 

பெங்களூரு, ஜன,9-
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பிராமணர்கள் முன்னேற்ற வாரியமும் மூலம் அறிவித்திருக்கும் இரு திட்டங்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
கடந்த வருடம் ஜூலை மாதம் எடியூரப்பா அரசு பிராமண முன்னேற்ற வாரியத்தை ஏற்படுத்தியது. இந்த வாரியத்தின் மூலம் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பெண்கள், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால் புதிய திட்டங்களான `அருந்ததி’ அல்லது `மைத்திரேயி’ திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறலாம். `அருந்ததி' திட்டத்தின் மூலம் பிராமணப் பெண்களுக்கு 25,000 ரூபாயும், `மைத்திரேயி' திட்டத்தின் மூலம் அர்ச்சகராக இருக்கும் பிராமணரை திருமணம் செய்துகொள்ளும் பிராமணப் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் நிபந்தனைகளில் மிக முக்கியமாக திருமணமான பின்பு குறிப்பிட்ட சில காலம் வரை திருமணத்திலிருந்து விலக மாட்டோம் என்ற உறுதிமொழியையும் மணமக்கள் அளிக்க வேண்டும் என்று இருக்கிறது.  ஏற்கெனவே கர்நாடக அரசு, மாலை நேர பூஜை நடத்த பயிற்சி எடுக்க விரும்பும் 8 முதல் 80 வயதுக்கு உட்பட்ட 4,000 பிராமணர்களுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.
அரசு சார்பாக அறிவிக்கப்படும் ஒரு திட்டம் எப்போதும் சாதியை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக இருக்க கூடாது என்பது அரசியல் சாசனம் வகுத்திருக்கும் விதி. ஆனால் பாஜக அரசுகள் அதனை எப்போதும் மதிப்பதில்லை. மாறாக மோடி துவங்கி அவரது சகாக்கள் ஆளும் மாநிலங்களில் குறிப்பாக உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் விதமாக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்திய அரசியல் சாசனத்திற்கு மாறாக இவர்கள்  மனுநீதியை பின்பற்றியே சட்டங்கள் மட்டுமின்றி திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். இது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, சமூக நீதிக்கு எதிரான தாக்குதலும் ஆகும் என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்னெழுந்து வருகிறது. 
 

;