india

img

கோவிட்-19 : 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,654‬ பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், 6,654 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையிலும், நோய் தொற்றின் பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,25,101 பேர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,654 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; 137 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,784 பேர் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,517 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 14,753 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 98 பேர் உயிரிழந்துள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் 13,268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 802 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 12,319 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

;