india

img

“ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை” கொண்டுவருவதன் நோக்கம் என்ன? - பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

வேளாண் பொருள்கள் நாடு முழுதும் எவ்விதத் தங்குதடையுமின்றி கொண்டுசெல்வதற்கு வசதி செய்து தருவதே ‘ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை’ ஒழுங்குவிதிகள் ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் கொண்டுவந்ததற்கான நோக்கம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை ஒழுங்குமுறை விதிகளை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் இந்த அரசு கொண்டுவந்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், வேளாண் உற்பத்திப்பொருள்களை சந்தைப்படுத்துவதில் அந்நிய நேரடி முதலீட்டுக்கும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இவற்றுக்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமார், ‘ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை ஒழுங்குவிதிகள்’ ஓர் அவசரச் சட்டத்தின்மூலம் கொண்டுவரப்பட்டிருப்பது உண்மைதான் என்றும், வேளாண் உற்பத்திப் பொருள்கள் நாடு முழுதும் தங்கு தடையின்றி ‘விவசாயிகள்’ மூலமாகக் கொண்டுசெல்வதற்கு இது உதவிடும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர், இதுவரை நாடு முழுதும் வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொண்டுசெல்வதில் பல்வேறு தடைகள் இருந்துவந்ததாகவும், இது இவ்வாறு கொண்டுசெல்பவர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது என்றும் எனவேதான் இந்த அவசரச் சட்டத்தின்மூலம் இவை நீக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

அமைச்சர் கூறியிருப்பதிலிருந்து, இந்த அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாது என்பதில் உறுதியாக இருப்பதும் இவர்கள் ‘விவசாயிகள்’ என்று கூறுவது உண்மையில் அதானிகள் போன்ற கார்ப்பரேட்டுகளையே என்பதும் நன்கு தெரிகிறது.

(ந.நி

;