india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வயநாடு தொகுதி ராகுல் ராஜினாமா!

புதுதில்லி, ஜூன் 18 - 18-ஆவது மக்களவைத் தோ்தலில், காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி உத்தரப்பிர தேசத்தின் ரேபரேலி, கேர ளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருந்தார். இதில் ஏதா வது ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை யில், வயநாடு எம்.பி. பதவி யை ராகுல் ராஜினாமா செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்திருந்தார். அதன்படி ராகுல் காந்தி தனது ராஜினாமா கடி தத்தை மக்களவைத் தலை வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பாமகவுக்கு சின்னம் கிடைக்குமா?

சென்னை, ஜூன் 18 - மக்களவைத் தேர்தலில்  10 இடங்களில் போட்டியிட்ட பாமக 4.23 சதவிகித வாக்கு களை மட்டுமே பெற்ற நிலை யில் மாநிலக் கட்சி அந்த ஸ்தை இழந்தது. இந்நிலை யில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தங்களுக்கு மாம் பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில கட்சி அந்த ஸ்தை இழந்த மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;