india

img

வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா?

வருமான வரித் துறையில் விளையாட்டுத் துறையினருக்கான, வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், சுருக்கெழுத்தர் நிலை II மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம்: வருமான வரித் துறை
பணியிடம்: தில்லி

பணி: வருமான வரி ஆய்வாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

பணி: வரி உதவியாளர் - 04
பணி: சுருக்கெழுத்தர் நிலை II - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: எம்டிஎஸ் - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18, 27 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் துறையில் பெற்ற சான்றிதழ்கள், உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxdelhi.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Commissioner of Income-tax (Hqrs.-Personnel), Room No. 378A, C.R. Building, I.P. Estate, NewDelhi-110 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்கள் அறிய: https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

;