india

img

செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் மத்திய அரசுக்கு யூஜிசி பரிந்துரை

புதுதில்லி, ஏப்.25- நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்கலாம் பல்கலைக்கழக மானி யக் குழு (யூஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மூடப் பட்டன.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்டன. மார்ச் மாதம் தொடங்கிய ஊர டங்கு மே 3-ஆம் தேதிவரை நீடிக்கிறது. அதற்குப் பிறகு என்ன நிலை என்பது தெரிய வில்லை. தற்போதுவரை ஊரடங்கு முழுமை யாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியவில்லை. ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரித் தேர்வுகளை ஏற்கெ னவே ஒத்திவைத்தது. இந்த நிலையில் கல் லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானி யக் குழு ஆய்வு செய்தது. 

ஹரியானா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழுக்களில் ஒன்று மூடப்பட்ட கல்லூரிகள், மாற்று கல்வி நாட்காட்டியில் பணிபுரியும் நிலையில் பல்கலைக்கழகங்களில் தேர்வு களை நடத்துவதற்கான வழிகளை ஆராய அமைக்கப்பட்டது.  ஆன்லைன் கல்வியை மேம்படுத்துவ தற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் இரண்டாவது குழு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) துணைவேந்தர் நாகேஷ்வர் ராவ் தலைமை யில் ஆய்வு செய்தது. இரண்டு குழுக்களும் வெள்ளிக்கிழமை தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தன.

செப்டம்பர் முதல் கல்வி அமர்வு தொடங் கப்படலாம் என்று ஒரு குழு பரிந்துரைத் துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு உள் கட்டமைப்பு மற்றும் வழிமுறைகள் இருந் தால் ஆன்லைன் தேர்வுகளை நடத்த வேண் டும் அல்லது ஊரடங்கு முடியும் வரை காத்தி ருந்து தேர்வுகளை நடத்தவேண்டுமென்று என்று இரண்டாவது குழு பரிந்துரைத்துள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த இரண்டு அறிக்கைகளையும்  ஆய்வு செய்து, இது தொடர்பாக உரிய வாழிகாட்டுதலைப் பெற்று அடுத்த வாரத்திற்குள் முடிவை அறி விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் நீட், ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்த திட்டம் உள் ளது. ஆனால் கொரோனா பரவலைத் தொட ர்ந்து இதையும் மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

;