வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்புக் காவலர்கள் உட்பட பலர் இருக்கிறார்கள். இதற்காக கூடுதல் நிதியும் முதலமைச்சர் ஒதுக்கி இருக்கிறார். இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது. காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அரசாணை விரைவில் வெளியிடப்படும்.அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்று நெல்லையில் ஜூலை 22 அன்று தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.