india

img

நீதிபதி சுக்லாவை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதியாக இருப்பவர் எஸ்.என்.சுக்லா. இவர் ஜிசிஆர்ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக் கல் சயின்ஸ் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு, உச்ச நீதிமன்ற விதிமுறைகளை மீறி, கடந்த 2017-ஆம்ஆண்டு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதனடிப்படையில் சுக்லா மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்த சிபிஐ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி கேட்டு 2018-ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியது.தீபக் மிஸ்ராவும், “நீதிபதிசுக்லா, ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது, தாமாகமுன்வந்து ஓய்வுபெற வேண் டும்” என தெரிவித்தார். ஆனால், நீதிபதி சுக்லா அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகோய், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது நீதிபதி சுக்லா மீதுஊழல் வழக்கு பதிவு செய்யசிபிஐக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி வழங்கியுள்ளார்.

;