india

img

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது... உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு-மருத்துவர்கள் எதிர்ப்பு

புதுதில்லி:
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவமேற்படிப்புகளில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என்று மருத்துவர்கள் சங்கம்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது.  ஆனால், இந்திய மருத்துவக்குழுவின் 2000வது ஆண்டின் மருத்துவ பட்டமேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.   விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவப்படிப்புக்கு வழங்கப்படும் 50 சதவீத உள் இடஒதுக்கீடு என்பது தமிழகத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில்புதியதாக எந்த நடைமுறையும் கிடையாது. இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதனால் அரசாணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதனால் இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில்கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு
இந்த நிலையில் இந்த வழக்கில் நவம்பர் 27 வெள்ளியன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ்தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில்,’ தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என்றுதெரிவித்துள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை. இந்தஉச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விமர்சித்துள்ளார்.

;