india

img

வெள்ளை மாளிகையும் கள்ள வணிகமும்...

கடைசி பத்தி தொடர்ச்சி...

கொடுக்க வேண்டுமென்று சட்டத்தில் திருத்தினார்கள். ஒருபக்கம் ஓஎஸ்ஆர் நிலத்தை கைப்பற்றாமல் இருப்பது, மறுபுறத்தில் சட்டத்தை நீர்த்துப்போகும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் செய்தது. இந்த லட்சணத்தில் பசுமையை எப்படி விரிவுப்படுத்துவது? வெப்பமாதலையும், மாசுபடுத்தலையும் எப்படி குறைப்பது?

சென்னை பெருநகர மாநகராட்சி சென்னை நகரத்தில் அனைத்து வட்டங்களிலும் பூங்காக்களையும், விளையாட்டுத் திடல்களையும், உள்ளரங்க விளையாட்டுத் திடல்களையும் உருவாக்க வேண்டும்.பூங்காக்களை தனியார்கள் ஸ்கேட்டிங்கிற்கு பயன்படுத்துவதை நிறுத்தி ஸ்கேட்டிங் செய்பவர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுத் திடலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டுத் திடல்களை அனைத்து மக்களும் பயன்படுத்தக் கூடிய முறை
யில் நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாதம் ரூ.2000/- செலுத்தி சாதாரண மக்கள் எந்த உடற்பயிற்சியிலும், உள்ளரங்க விளையாட்டிலும் ஈடுபட முடியாது.எனவே, சென்னை மாநகராட்சி, வணிகமய நடவடிக்கையை விடுத்து பெருநகரை பாதுகாக்கக் கூடிய திட்டத்தை உருவாக்கி அனைத்து மக்களின் உடல்நல, மனநலமற்றும் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தும் முறையிலும் வெப்பமாதலை, மாசுபடுதலை தடுக்கக் கூடிய முறை
யிலும் செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர் : மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்) தென்சென்னை

;