india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கனமழையால் அசாம் மாநிலம் மிக மோச மான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 16.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். 

நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனா வத் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடும் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலை யில் என்சிஇஆர்டியின் அலட்சியத்தால் 3 புத்தகங்கள் இல்லாமல் 6ஆம் வகுப்பு மாண வர்கள் தவித்து வருகின்றனர். 

ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரத மர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை  அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் என பிர தமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது. 

தன்னை ‘பாபா’வாக நினைக்கும் பிரதமர் நாட்டில் இருந்தால், மக்கள் மத்தியில் குருட்டு நம்பிக்கை அதிகரிக்கும் என சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் சிறப்பு ஷூட்டிங் உடன் விருந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி 400 மீட்டர் ஓட்டப் பந்தய வீராங்கனையான தீபன்ஷி ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ள நிலையில், அவர் இந்திய தடகள அணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.24,000 கோடி செலவில் மேகாலயாவின் உமியாமில் இருந்து அசாமின் சில்சார் வரை யிலான 4 வழிச் சாலைக்கு ஒப்புதல் வழங்கி யுள்ளது ஒன்றிய அரசு.

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் 22 ஆண்டு களாக தலைமறைவாக இருந்த கும்பல் பலாத்கார குற்றவாளி வியாழனன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மைக்கேல் என்கிற திப்பு ராம் ஷிரோமன் பாண்டே (46) உட்பட  நான்கு பேர் 2002 ஜனவரி 2 அன்று நாலோ சோபராவில் ஒரு பெண்ணை கடத்திச் சென்று பாலி யல் பலாத்காரம் செய்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழி லாளர்களுக்கு உடனடி கடன் வழங்கும் வகையில் புதிய ஆன்லைன் கடன் திட்டத்தை பாரத்  ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. 

ஹாத்ரஸ்: 118 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ஹாத்ரஸ்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் பகுதி யில் திங்களன்று போலோ  பாபா என்ற சாமியார் பங்கேற்ற ஆன்மீக  சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிச லில் 123 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில், அவர்களில் பலரது நிலைமை கவ லைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது வரை உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல் அடையாளம் காணப்  பட்டுள்ளதாகவும், 5 பேரின் உடல்கள்  இன்னும் அடையாளம் காணப்பட வில்லை எனவும் பிரேத பரிசோதனை முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அடையாளம் காணப்  பட்ட 118 பேரின் உடல்கள் அவர்களது  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார்  வியாழனன்று தெரிவித்தார்.

ரூ.1 லட்சம் சன்மானம்

ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான பிர காஷ் மதுகரை பற்றி தகவல் தெரிவித்  தால் ரூ.1 லட்சம் சன்மானம் என உத்தரப்  பிரதேச பாஜக அரசு அறிவித்துள்ளது. 

ரியல் எஸ்டேட் வேலையை துவங்கிய சந்திரபாபு நாயுடு
அமராவதி

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக  சந்திரபாபு நாயுடு பதவி யேற்றுள்ள நிலையில், அமரா வதியைத் தலைநகரமாக மாற்றும் திட்  டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். அமராவதியில் வணிக மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 8,859  ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  புதிய தலைநகரமாக உருவாக்க மோடி  அரசிடம் சிறப்பு அந்தஸ்து நிதியை பெறா மல் மாநில மக்களிடம் நன்கொடை வசூல்  நடைபெற்று வருகிறது. அதாவது அமரா வதிக்காக பொதுமக்களிடம் முதல்வரின்  மகனும் அமைச்சருமான லோகேஷ் நன்  கொடை வசூலித்து வருகிறார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு  ஆட்சியில் அமர்ந்தவுடன் அமராவதியில் நிலத்தின் விலை சதுர அடிக்கு ரூ. 6,000  முதல் 7,000 வரை உயர்ந்துள்ளது. அதா வது இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ள  நிலையில், அமராவதியின் ரியல் எஸ்டேட்  விவகாரங்கள் அனைத்தும் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நபர் தான் மேற்  பார்வை செய்வதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதன்மூலம் அமராவதியில் சந்திரபாபு நாயுடு ரியல் எஸ்டேட் வேலையை நேரடியாக துவங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 

;