india

img

நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் 'ரெட்மி கே40' ஸ்மார்ட்போன் 

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி கே40 ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்துகிறது.

சில புதிய அம்சங்களுடன் ரெட்மி ‘கே’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ’கே40’  ஸ்மார்ட்போனை ஸ்யோமி நிறுவனம் தயாரித்துள்ளது.  6.67 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை, 870ஸ்னாப்டிராகன், 6 ஜிபி உள்ளக நினைவகம், 64 ஜிபி கூடுதல் நினைவகம், 48 எம்பி அளவுள்ள பின்பக்க கேமராவில் 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 20 எம்பி அளவைக் கொண்டிருக்கிறது. 4520 எம்ஏஎச்  பேட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஒஎஸ்  ஆடியோ டைப் - சி போர்ட்  போன்ற சிறப்பம்சங்களை இந்த ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

;