india

img

நாட்டின் 2-ஆவது பணக்காரரானார் அதானி!

புதுதில்லி:
2019-ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள நிலையில், வழக்கம் போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர் பட்டியலில், தொடர்ந்து 12-ஆவது முறையாக முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.அம்பானியின் சொத்து மதிப்பு 51.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில், ஜியோ நிறுவனம் மூல மாக மட்டும் 4.1 பில்லியன் டாலர் அளவிற்கு, அம்பானி அவரது சொத்து மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.இதில், ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பரும், அதானிகுழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி, 8-ஆவது இடத்திலிருந்து,ஒரே பாய்ச்சலில் 6 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.இதுவரை இரண்டாவது இடத்திலிருந்து ஹிந்துஜா சகோதரர்களை அவர் மூன்றாமிடத்திற்குத் தள்ளியுள்ளார். அதானியின் சொத்து மதிப்பு,15.7 பில்லியன் டாலராக (சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம்  கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. ஆஸ்திரே லிய நிலக்கரி சுரங்கம்,விமான நிலைய பராமரிப்பு, மின்சக்திநிறுவனம் ஆகிய  பல புதிய தொழில்கள் அதானிக்கு நன்றாக கைகொடுத்துள்ளதாக போர்ப்ஸ் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனங் களில் ஒன்றான, அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy limited) நிறுவனப் பங்குகளின் விலை 2019 பிப்ரவரி 19-ஆம் தேதி வெறும் 30 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று அதே ‘அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட்’நிறுவனத்தின் பங்கு விலை 71 ரூபாய் 45 காசுகளாக அதிகரித்து இருக்கிறது. அதாவது, சுமார் 8 மாத காலத்துக்குள், அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 138 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது. அதானிக்கு அடுத்ததாக, ஹிந்துஜா சகோதரர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 15.6 பில்லியன் டாலர் ஆகும்.பல்லோஞ்சி மிஸ்திரி 15 பில்லியன் டாலர், உதய் கோடக் 14.8பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் வந்துள்ளனர்.

;