india

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் பாஜக ஆத்திரம்

புதுதில்லி, ஜூன் 28- மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறி விக்கப்பட்டபின்னர், நாட்டின் பல பகுதி களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் மாடுகளை ஏற்றிவந்த மூன்று முஸ்லீம்களை, பசுப் பாதுகாப்புக் குழு வைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் குண்டர்கள், ‘பசுக்களைக் கடத்திச் செல்வதாக’ முத்திரை குத்தி படுகொலை செய்துள்ளனர்.

அலிகாரில், திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு முஸ்லீம் கொல்லப் பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசம், மண்டலாவில், சில முஸ்லிம்களின் வீடுகளில் இருந்த குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டிறைச்சி  இருந்ததாகக் கூறப்பட்டு, அந்தத் தக வல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் முஸ்லீம்களின் 11 வீடுகள் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.

லக்னோ அக்பர்நகரில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில், ஆற்றின் முகப்புப் பகுதியில் தடுப்பு கட்டுகிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் வாழும் வீடுகள்  புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் வதோதராவில் முத லமைச்சர்  வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் உள்ளவர் களுக்காகக் கட்டப்படும் வீட்டுவசதி வளாகத்தில், ஒரு முஸ்லிம் பெண் மணிக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் உள்ள இந்துக் குடும்பத்தினர் தூண்டிவிடப்பட்டு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக்கிறார்கள்.

இமாச்சலப் பிரதேசத்தில் நஹன் பகுதியில் ஒரு முஸ்லிம், சமீபத்தில் பக்ரீத் பண்டிகையின்போது ஒரு பசுவை தானம் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு, அவ ருடைய கடை சூறையாடப்பட்டு, சேதப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்மீது பசுவை வெட்டிக் கொன்றார் என்று அவ ருக்கெதிராக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத் திற்குப்பின் அங்கே கடை வைத்திருந்த மற்ற 16 முஸ்லிம்கள் அந்த நகரத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டி ருக்கிறார்கள்.

தில்லியில் உள்ள சங்கம் விஹாரில் வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே பசு மாடு ஒன்று இறந்துகிடந்ததை அடுத்து, இந்துத்துவாவாதிகளின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைக் கேட்டு, அப்பகுதியில் வசித்துவந்த முஸ்லிம்கள் அந்தப் பகுதி யிலிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படு கிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு எதி ராக மதவெறித் தாக்குதல்கள் கூர்மைப் படுத்தப்பட்டிருக்கின்றன என்பதையே இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்து கின்றன.

பாஜக மற்றும் இதர மதவெறி அமைப்புகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. 

மக்களின் கவனத்தைத் திசைதிருப் பும் நோக்கத்துடன் இத்தகைய இழிநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்துத்வா மதவெறியர்களைக் கண்டித்து கிளர்ச்சிப் போராட்டங்களில்  ஈடுபட வேண்டும் என்று நாடு முழுதும் உள்ள கட்சிக் கிளைகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அறைகூவி அழைக்கிறது.  (ந.நி.)

;