உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோவின் செயலிகள் திடீரென முடங்கின.
ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ என்ற பிரபல ஆன்லைன் உணவு விநியோக செயலிகள் மூலம் பலர் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழில்நுட்பக் காரணத்தால் நாடு முழுவதும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ செயலிகள் கடந்த சில நிமிடங்களாக முடங்கின.
இதுகுறித்து இரண்டு நிறுவனங்களின் தரப்பிலும் எந்தவொரு விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.