india

img

தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திரங்களின் எண்களை வரும் திங்களுக்குள் மாலை 5 மணிக்குள் வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ சமர்ப்பித்தது. இதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று இரவு தனது இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களின் விவரங்களையும், அதன் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களும் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பத்திரங்கள் எண்களை, தேர்தல் பத்திரம் எந்த தேதியில் வழங்கப்பட்டது, யாரால் வழங்கப்பட்டது, யாரால் பணமாக்கப்பட்டது ஆகிய விவரங்கள் அனைத்தையும் வரும் வரும் திங்களுக்குள் மாலை 5 மணிக்குள் வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால், எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

;