india

img

மாணவர்கள் 2 முழுநேர பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் தொடர அனுமதி

மாணவர்கள் இப்போது ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து, ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை இயற்பியல் முறையில் தொடர முடியும் என யுஜிசி தலைவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன், குறுகிய கால, டிப்ளமோ படிப்புகளைப் படிக்க மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது. 

இந்தநிலையில் இன்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, மாணவர்கள் பல திறன்களை பெற அனுமதிக்கும் வகையில், யுஜிசி புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது.

அதன்படி ஒரு மாணவர் ஒரு நேரத்தில் இயற்பியல் முறையில் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ இரண்டு பட்டப்படிப்புகளை தொடர அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

இதுதொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.  

 

;