india

img

4ஜி சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை

பிஎஸ்என்எல் 4ஜி தொலைத்தொடர்பு சேவை விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

ஒன்றிய மோடி அரசு தொடர்ச்சியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவை வழங்குவதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது.  இதன் காரணமாக முகேஷ்  அம்பானியின் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் லை வணிக ரீதியாக ஓரங்கட்டி முன்னேறின. இந்நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில உள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் நடவடிக்கையில் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பிஎஸ்என்எல் 4ஜி  வசதி என்பது முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயார் செய்யப்படுவது ஆகும்.  

இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்தியா முழுவதும் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார். மேலும் 4ஜி சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடெங்கிலும் சுமார் 1.12 லட்சம் டவர்களை கட்டமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.  

முன்னதாக மணிக்கு 100 கிமீ. வேகத்தில் ஓடும் ரயில்களில் 4ஜி தொழில்நுட்பம் மூலம் தொடர்பு தடைப்படுவதால், 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் மட்டுமே ரயில்களுக்குள் இடைவிடாத இணைய இணைப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்னா தெரிவித்துள்ளார்.

;