india

img

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்! - சீத்தாராம் யெச்சூரி

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று 400க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1000க்கும் அதிகமான மருந்து உட்கூறுகளின் விலை 12% உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. 

இந்த நிலையில், கோவிட் பெருந்தொற்று மக்களின் வாழ்வாதாரத்தை விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளது. எனவே, அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.
 

;