சீன, பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானிய கைத்துப் பாக்கிகளின் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் சீன எறி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட் களை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ள னர்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட் டத்தில் ஜுல்லாஸ் பகுதியில் இந்திய ராணுவத்தின் ரோமியோ படையினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன.
இரட்டை எஞ்சின் அல்ல; இரட்டை ஊழல்
அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
பாஜக ஆட்சி செய்யும் 22 மாநி லங்களில் இலவச மின்சாரம் தந்தால் தில்லி தேர்தலில் மோடிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இரட்டை இன்ஜின் அரசுகள் தோல்வியடைந்து வரு வதாகவும், இரட்டை இன்ஜின் என்பது இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழலாக மாறிவிட்டது எனவும் விமர் சித்தார்.
சத்தீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் வனப்பகுதியில் போலீ சாருக்கும், மாவோயிஸ்டு களுக்கும் இடையே வெள்ளி யன்று பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- தண்டேவாடா மாவட்டங்களின் எல்லை யில் அபுஜ்மாத் வன பகுதியில் மாவோ யிஸ்டுகளின் நடமாட்டம் திடீரென அதி கரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதி ரடி படையினரும், போலீசாரும் வெள்ளி யன்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். துல்துலி, நெந்தூர் ஆகிய கிராமங்க ளுக்கு இடையே உள்ள பகுதியில் தேடு தல் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறை யினர் மீது மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட்டதையடுத்து, பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், மூண்ட பயங்கர துப்பாக்கிச் சண்டை பல மணி நேரம் நீடித்தது. இந்த தாக்குதலில் 36 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்கிற ஜானி பாஷா வுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் சிறப்பாக நடனத்தை வடிவமைத்தற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறினார். இந்தப் புகா ரின் பேரில் ஜானி மாஸ்டர் மீது ஐதரா பாத் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை தீ: 7 பேர் பலி
மும்பையின் வணிக நகரமான செம்பூ ரில் ஞாயிறு காலை, கடைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து ஞாயிறு அதிகாலை 5.20 மணியளவில் செம்பூர் பகுதியின் சித்தார்த் காலனியில் நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் தரை தளம் கடையாகவும், மேல் தளம் குடியிருப்பாகவும் பயன் படுத்தப்பட்டு வந்தது. கீழ் தளத்தில் உள்ள மின் சாதன விற்பனைக் கடை யில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும்: ராகுல்
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூ ரில் சனியன்று நடந்த அரசியல மைப்பு மரியாதை மாநாட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரி விப்பதாகவும், உண்மைகள் வெளிவரு வதை விரும்பவில்லை எனவும் தெரி வித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூ ரில் சனியன்று நடந்த அரசியல மைப்பு மரியாதை மாநாட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரி விப்பதாகவும், உண்மைகள் வெளிவரு வதை விரும்பவில்லை எனவும் தெரி வித்தார்.
ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக குமாரசாமி மீது வழக்குப்பதிவு
பெங்களூருவை சேர்ந்த தொழில திபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச் சர் குமாரசாமி மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தொழிலதிபர் விஜய் டாடா என்பவர் அளித்த புகாரின் பேரில், சென்னபட்னா இடைத்தேர்தலுக்கு ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட மேலவை உறுப்பினர் ரமேஷ் கவுடா மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்து வமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல் உட்பட 10 கோரிக்கை களை அவர்கள் முன்வைத்துள்ளனர். அரசு தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறை வேற்றும் வரையில் தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.