india

img

காஷ்மீர் பத்திரிகையாளர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

நியூயார்க்கில் புலிட்சர் விருதை பெற சென்ற காஷ்மீர் பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ, தில்லி விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். 

காஷ்மீரை சேர்ந்த சன்னா இர்ஷாத் மட்டூ, ஒரு புகைப்பட கலைஞர்.   'இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி' என்ற தலைப்பில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட  புகைப்படங்களுக்காக, சன்னா இர்ஷாத், மறைந்த புகைப்பட கலைஞர் தானிஷ் சித்திக், அமிர் தேவ் மற்றும் அத்னன் அபிதி ஆகியோருக்கு கடந்த மே மாதம் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நியூயார்க்கில் புலிட்சர் விருதை பெற சென்ற காஷ்மீர் பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ, தில்லி விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க விசா மற்றும் டிக்கெட் இருந்தும் வெளிநாட்டுக்கு பயணிக்க தடை விதித்துள்ளனர். இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்துவது இரண்டாவது முறை என்றும், இதேபோல், 10 வெற்றியாளர்களில் ஒருவராக செரண்டிபிட்டி ஆர்லஸ் கிரான்ட் 2020  புத்தக வெளியீட்டு மற்றும் புகைப்படக் கண்காட்சிக்காக பாரிஸுக்குச் செல்லும் போதும் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சன்னா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

;