உலகளவில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ள தாக உலக சுகாதார நிறுவ னம் தெரிவிக்கிறது. ஐந்து முதல் 29 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மரணங்க ளுக்கு சாலை விபத்துக்களே முக்கியக் காரணம் என்றும் தெரிவிக்கிறது.
2010-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுக்கு இடை யில் உலகளவில் சாலை போக்குவரத்தால் நிகழும் இறப்புகள் ஐந்து சதவீதம் குறைந்து 1.19 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள் ளது. ஆனால் இந்தியாவில் உயிரிழப்போர் விகிதம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய நிலைமை குறித்து உலக சுகாதார நிறு வனம் விடுத்துள்ள அறிக்கை யில், “2010-ஆம் ஆண்டு இந் தியாவில் சாலை போக்கு வரத்தால் நிகழ்ந்த இறப்பு களின் மொத்தஎண்ணிக்கை 1.34 லட்சம். இது 2021-ஆம் ஆண்டில் 1.54 லட்சமாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்்ளது.
2022-ஆம் ஆண்டு இந்தி யாவில் நிகழ்ந்துள்ள 4.61 லட்சம் சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் உயிரிழந் துள்ளனர் என ஒன்றிய சாலை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் பெலா ரஸ், புருனே தாருஸ்ஸலாம், டென்மார்க், ஜப்பான், லிதுவேனியா, நார்வே, ரஷ்ய கூட்டமைப்பு, டிரினி டாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வெனிசுலா. மேலும் முப்பத்தைந்து நாடுகள் சாலை விபத்துக்களை குறைப்பதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்த நாடுகள் சாலை போக்குவரத்து இறப்புகளை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைத்துள்ளன.
2019- ஆம் ஆண்டு நில வரப்படி, ஐந்து முதல் 29 வயதுக்குட்பட்ட குழந்தை கள் மற்றும் இளைஞர்களின் மரணங்களுக்கு சாலை விபத்துக்களே முக்கியக் காரணமாக உள்ளது. இந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஏதாவது ஒரு பணியில் உள்ளவர்கள் ஆவர்.
கடந்த பத்தாண்டுகளில், சாலைப் போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் குறைந்துள் ளது. 2010-ஆம் ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு 18 ஆக இருந்த இறப்பு விகிதம். 2021-ஆம் ஆண்டு ஒரு லட்சத்திற்கு 15 ஆகக் குறைந்துள்ளது.
2010 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் மோட்டார் வாக னங்களின் எண்ணிக்கை 160 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் வாகனங்களுக்கு ஆண்டு இறப்பு விகிதம் 79 ஆக இருந்தது 47 ஆகக் குறைந்துள்ளது.
உலகளவில் நிகழ்ந்த சாலை போக்குவரத்து இறப்புகளில் 28 சதவீதம் தென்கிழக்கு ஆசிய பிராந்தி யத்திலும், 25 சதவீதம் மேற்கு பசிபிக் பிராந்தியத்திலும், 19 சதவீதம் ஆப்பிரிக்க பிராந்தி யத்திலும், 12 சதவீதம் அமெ ரிக்க பிராந்தியத்திலும், 11 சதவீதம் கிழக்குப் பிராந்தியத்திலும் நிகழ்ந்துள் ள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி, மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் ஐந்து சத வீத இறப்புகள் நிகழ்ந்துள் ளன.
உலகளவில், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் 30 சத வீத இறப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்; சாலைகளில் நடந்து செல்ப வர்களில் 23 சதவீதம் பேர். இரு மற்றும் மூன்று சக்கர வாகனம் பயன்படுத்துப வர்கள் 21 சதவீதம் பேர் உயி ரிழந்துள்ளனர். 6 சதவீத இறப்புகளுக்கு சைக்கிள் ஓட்டுபவர்கள் காரணம். அதே நேரத்தில் 3 சதவீத இறப்புகள் இ-ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துபவர்களால் நிகழ்ந்துள்ளன.