india

img

30 இந்திய பெருநகரங்களில் நீர் பற்றாக்குறை அபாயம் - அதிர்ச்சித்தகவல்

30 இந்திய பெருநகரங்களில் நீர் பற்றாக்குறை அபயாம் ஏற்படும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் பல பகுதிகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை குறித்த சர்வதேச இயற்கை நிதியம் நடத்திய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வில் 2050ம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படும்  100 முக்கிய உலக பெருநகரங்களில் குறைந்தது 35 கோடி மக்கள் வசித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு  தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 17 சதவிகிதமாக இருக்கும் மக்கள் தொகை வரும் 2050ம் ஆண்டில் 51 சதவிகிதமாக உயரக்கூடும்.
இந்தியாவின் பெருநகரங்களான ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர்., கொல்கத்தா, பெங்களூரு,. மும்பை கோழிக்கோடு, விசாகப்பட்டினம், உள்ளிட்ட 30 நகரங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது- 

;