india

img

மோடியின் ஆலோசகர்களாக தனியார் நிறுவன அதிகாரிகள்

புதுதில்லி:
பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களாக பிரபல தனியார் நிதி நிறுவனஅதிகாரிகளான நிலேஷ் ஷா மற்றும்நீலகாந்த் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொருளாதார விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கான குழு (Economic AdvisoryCouncil to the Prime Minister - EAC-PM) ‘நிதி ஆயோக்’கைச் சேர்ந்த பிபேக் தேப்ராய் தலைமையில் உள் ளது. அதே, நிதி ஆயோக்கைச் சேர்ந்த ரத்தன் வாட்டல், ஜே.பி. மார்கன் நிறுவனத்தைச் சேர்ந்த சாஜித் செனாய், இந்திராகாந்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிமா கோயல் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், ‘கோடாக் மகேந்திரா’ தனியார் கார்ப்பரேட் நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா மற்றும் ‘இந்தியா ஸ்டிராடஜிஸ்ட்’ தனியார் கார்ப்பரேட் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நீல்காந்த மிஸ்ரா ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் புதிதாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

“நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது; வெளியில் பகிரங்கமாக தெரியாத நிதியாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது” என்று உண்மையைப் பேசியதற்காக, பிரபல பொருளாதார வல்லுநர்களான ரதின் ராய், ஷாமிகா ரவிஆகியோர், ஆலோசனைக் குழுவிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டனர். அந்த இடங்களில் நிலேஷ் ஷா மற்றும் நீலகாந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி மேலாண்மைகல்வி நிறுவனத் தலைவர் அனந்தநாகேஸ்வரனும் குழுவில் இணைக் கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

;