india

img

உ.பி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த கிடந்த எலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில், சப்பாத்திக்கு உப்பி வழங்கியது, சாப்பாட்டுக்கு மஞ்சள் கலந்த தண்ணீர், ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என பல குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் தற்போது, உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைக் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், எலி இறந்த கிடந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மதிய உணவை என்.ஜி.ஓ. நிறுவனமான ஜன் கல்யாண் சான்ஸ்தா என்ற அமைப்பு செய்து கொடுக்கிறது. இந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் 9 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

;