india

img

12 மாநிலங்களவை இடங்களுக்கு செப். 3 அன்று தேர்தல்!

9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், அரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21-ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலங்களவை தொகுதிக்கும் தனித்தனியாக செப்டம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், 10 மாநிலங்களவை இடங்கள் காலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.