india

img

விவசாயிகளுக்காக பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார் கவிஞர் சுர்ஜித் பாட்டர்!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை கவிஞர் சுர்ஜித் பாட்டர் திருப்பி அளித்தார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் 12 நாட்களாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  3 வேளாண் சட்டங்களை நீக்குவதாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்து வரும் 8ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர். 

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தியாவில், அரசியல் மட்டுமல்லாது சினிமா, விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் சுர்ஜித் பட்டார்  மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.

;