india

img

யுபிஎஸ்சி-இன் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!

யுபிஎஸ்சி-இன் புதிய தலைவராக முன்னாள் ஒன்றிய சுகாதார செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், யுபிஎஸ்சி-இன் புதிய தலைவராக முன்னாள் ஒன்றிய சுகாதார செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளர். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார். பிரீத்தி சுதன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, யுபிஎஸ்சி தலைவராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .