india

img

பிபிசி ஆவணப்படம் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்த "இந்தியா: மோடிக்கான கேள்வி" எனும் ஆவணப்படத்தின் முதல் பாகம், கடந்த ஜனவரி 17-ஆம் தேதி வெளியானது. பிரதமர் மோடி தொடர்புடைய இந்த ஆவணப்படத்தை, மோடி அரசு குறுக்கு வழியில் தடை செய்தது. இதற்கிடையில், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியானது. ஒன்றிய அரசு இந்த ஆவணப்படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி, இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
 

;