india

img

மாநகராட்சி, நகராட்சிகளில் தனித் தனியாக செயல்படும் கடைகளுக்கு அனுமதி

புதுதில்லி, ஏப்.25- ஊரடங்கு தளர்வுக்கு முன்பே பதிவுபெற்ற அத்தியா வசியமற்ற பொருட்களின் கடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள கடை கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தனித்தனியாக செயல்படும் கடைகளையும் திறந்து கொள்ளலாம். 

திறந்திருக்கும் கடைகளில் ஐம்பது சதவீத அளவு ஊழி யர்கள் முகக்கவசத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வணிக வளாகங்களில் செயல்படும் கடை களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

;